/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரங்களை அகற்றக்கூடாது; கலெக்டரிடம் நா.த.க., மனு
/
மரங்களை அகற்றக்கூடாது; கலெக்டரிடம் நா.த.க., மனு
ADDED : நவ 12, 2024 06:17 AM
திருப்பூர்; மரங்களை அகற்றாமல் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என, நா.த.க., வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார் பில், அபிநயா, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
திருப்பூர் - தாராபுரம் ரோடு, வெள்ளியங்காடு நால்ரோடு சந்திப்பில், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில், சாலையோர மரங்களை அப்புறப்படுத்த முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தடுத்து நிறுத்தினேன்.
இந்நிலையில், 55வது வார்டு கவுன்சிலர் ஆனந்தியின் கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார்; 'இரவு நேரங்களில் மரத்தை வெட்டினால் என்ன செய்ய முடியும்; 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அவ்வளவுதானே' என ஏளனமாக பேசினார்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்றாமல், மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மரங்களை அகற்றாமல், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 55வது வார்டில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
குடிநீர் குழாய்களில் உடைப்பு சரி செய்வதில் தாமதம்; தெருநாய்களை பிடிப்பதில்லை; குப்பைகள் அகற்றப்படுவதில்லை.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

