sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குட்டீஸூக்கு 'டிரெண்டி'யான ஆடைகள்

/

குட்டீஸூக்கு 'டிரெண்டி'யான ஆடைகள்

குட்டீஸூக்கு 'டிரெண்டி'யான ஆடைகள்

குட்டீஸூக்கு 'டிரெண்டி'யான ஆடைகள்


ADDED : அக் 25, 2024 10:31 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளிக்கு, பிராக், பட்டு பாவாடை, சட்டை,பேன்ட் என வழக்கம்போல இன்றி, இந்த முறை உங்கள் குழந்தைகளுக்கு, டிரெண்டியான ஆடைகளை தேர்ந்தெடுங்கள்.

லெகங்கா சோழி


நாளுக்குநாள் லெகங்கா ஆடைகளில் முடிவிலா டிசைன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. புல் ேஷால்டர், கோல்டு ேஷால்டர் மற்றும் ஆப் ேஷால்டர் பிளவுஸ், குழந்தைகளுக்கு சிறந்த ஸ்டைலை வழங்கும். பிரைட்டான லெகங்காவுக்கு, கான்ட்ராஸ்ட் கலரில் பிளவுசை தேர்ந்ெதடுக்கலாம். மிர்ரர் வேலைப்பாடு சோழியில், சிறிய விளக்கை போல உங்கள் குழந்தை மின்னுவாள்.

சல்வார் குர்தீஸ் செட்


பேஷனிலிருந்து எப்போதும், சல்வார் ஆடைகள் விலகுவதில்லை. டிரெடிஷன், டிரெண்டி என பல டிசைன்களில் சல்வார் குர்தீஸ் கிடைக்கிறது. பல்வேறு வண்ணங்கள், மாடல்களில், உங்கள் விருப்பத்திற்கேற்ப, டாப்ஸ், பேன்ட்ஸ்களை மிக்ஸ் அண்ட் மேட்ச்சில் வாங்கலாம். தீபாவளி டிரெண்டிங்கில், தோத்தி பேட்டர்ன் சல்வார் குர்தீஸ் செட்டும், மிகவும் பிரபலமாகி வருகிறது.

விழாக்கால கவுன்


பெண் குழந்தைகளின் அழகை மெருகூட்டுவதில், கவுன்களுக்கு நிகர் எதுவுமே இல்லை. தீபாவளிக்கு புதிய வரவான, வெஸ்டர்ன் கவுன்களின் எத்தினிக் வெர்ஷனே தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. ஷிம்மரி கவுன்ஸ், புளோரல் பிரிண்ட்ஸ், கேப் ஸ்லீவ்லெஸ் டிசைனர் கவுன், பால் கவுன் ஆகியவை தற்போது டிரெண்டிங்கில் உள்ளன.

கராரா சூட்ஸ்


ஷராரா மற்றும் கராரஸ் ஆடைகள் சிறப்பானவை. ஷார்ட் பிளவுஸ் மற்றும் குர்தாவுடன், ஷராரா மற்றும் கராரா பேன்ட்ஸ்களை மேட்ச் செய்யலாம். பரந்த அளவில் ஸ்டைல்கள் மற்றும் டாப் டிசைனர் பேட்டனில் ஷராராக்கள் கிடைக்கின்றன. பண்டிகைகளில் ஓடி, ஆடி விளையாட குழந்தைகளுக்கு, சவுகரியமாக இருப்பது கூடுதல் சிறப்பு.

டிசைனர் ஷர்வானி


பெண் குழந்தைகளை போல், உங்கள் ஆண் குழந்தைகளுக்கும், வண்ணமயமான ஆடைகளை அணிய ஆசையா. அப்போ, டிசைனர் ஷர்வாணியை டிரை செய்து பாருங்க. மஞ்சள், ஆரஞ்சு, பச்சை என போல்டான வண்ணங்களில், எம்ப்ராய்டரி, ஸ்டோன், கிளாஸ் வொர்க் என வித, விதமான வேலைப்பாடுகளில் ஷர்வானிகள் கிடைக்கிறது.

எத்தினிக் குர்தா


சிம்பிளாக இருந்தாலும், ஸ்டைலிஷாக இருக்கும், எத்தினிக் குர்தா பைஜாமாவை வாங்கலாம். எத்தினிக் குர்தா பைஜாமாவிற்கு, பார்மல் ஜாக்கெட் கூடுதல் அழகை சேர்க்கும். குர்தாவிற்கு மேட்சிங் வண்ணத்தில், பைஜாமாவில் பார்டர் இருப்பது முக்கியம். இந்த தீபாவளியில், சில்க் குர்தா தோத்தி செட் டிரெண்டிங்கில் உள்ளது.

3 பீஸ் குர்தா செட்


சிம்பிள் மற்றும் பாரம் பரியமான லுக்கிற்கு, குர்தா, பைஜாமா மற்றும் குளோஸ்டு வெயிஸ்ட் கோட்டை குழந்தைகளுக்கு வாங்கலாம். மூன்று பீசையும், வெவ்வேறு வண்ணங்களில் அணியலாம். இல்லையெனில், வெள்ளை நிற பைஜாமாவுடன், இரு வேறு வண்ணங்களில் குர்தா, வெயிஸ்ட் கோட்டை வாங்கலாம்.

வெய்ஸ்ட்கோட்


பிளைன் வண்ணத்தில், குர்தா, தோத்தி செட்மற்றும் டிசைனர் வெய்ட்ஸ்கோட் டிரெண்டிங்கில் உள்ளது. எம்ப்ராய் டரி, புளோரல் பிரின்ட், டிசைனர் வெய்ஸ்ட் கோட்டுகள் என வேலைப்பாடுள்ள வெய்ஸ்ட் கோட்டுகளை வாங்கலாம்.






      Dinamalar
      Follow us