/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திருச்சி - கூடலுார் பஸ் முன்பதிவு வசதி தேவை'
/
'திருச்சி - கூடலுார் பஸ் முன்பதிவு வசதி தேவை'
ADDED : ஜூலை 14, 2025 12:56 AM
திருப்பூர்; அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் மூலம், நீலகிரி மாவட்டம் கூடலுாரில் இருந்து திருச்சிக்கு, 332 கி.மீ., துாரம் அரசு பஸ் இயக்கப்படுகிறது. தினமும் கூடலுாரில் மாலை, 5:45க்கு புறப்படும் பஸ், ஊட்டிக்கு இரவு, 8:00 மணிக்கு வருகிறது; மேட்டுப்பாளையம் இரவு, 10:15 மணி; திருப்பூருக்கு நள்ளிரவு, 12:30 மணிக்கு வருகிறது. திருப்பூர் புதிய மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்ட் இரண்டுக்கும் செல்லும் பஸ், மறுநாள் அதிகாலை, 4:35க்கு திருச்சி சென்றடைகிறது.
பின், காலை, 6:00க்கு திருச்சியில் புறப்பட்டு, 10:25க்கு திருப்பூருக்கும், மதியம், 12:05க்கு மேட்டுப்பாளையத்துக்கும் செல்கிறது. மதியம், 2:15 ஊட்டி, மாலை, 4:15 கூடலுார் சென்றடைகிறது. நீண்ட துாரம் பயணிக்கும் இந்த பஸ்சில் முன்பதிவு டிக்கெட் வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
பயணிகள் கூறுகையில், 'நள்ளிரவு திருப்பூர் வரும் பஸ்சில் திருச்சிக்கு பயணிக்க முடியவில்லை. கூடலுாரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து திருப்பூருக்கும் பயணிகள் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. திருச்சியில் இருந்து ஊட்டிக்கு இந்த பஸ்சில் பயணிப்போர் பலர் உள்ளனர். இதனால், இந்த பஸ்சில் முன்பதிவு டிக்கெட் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கலெக் ஷனுக்கு ஏற்ப இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.