/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் கோவை, போத்தனுார் செல்லாது
/
திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் கோவை, போத்தனுார் செல்லாது
திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் கோவை, போத்தனுார் செல்லாது
திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் கோவை, போத்தனுார் செல்லாது
ADDED : நவ 09, 2024 07:13 AM

திருப்பூர்; சேலம் ரயில்வே கோட்டத்தில் நடக்கும் பொறியியல் பணி காரணமாக, திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) ஒன்பது நாட்களுக்கு கோவை செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் பத்து நாட்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் பொறியியல் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதனால், ரயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. திருச்சி - பாலக்காடு டவுன் (எண்:16843) ரயில் நவ., 11, 15, 16, 18, 22, 24, 25, 29 மற்றும் 30ம் தேதி ஆகிய ஒன்பது நாட்கள், சூலுார் ரோடு வரை மட்டும் இயக்கப்படும்.
சிங்காநல்லுார், பீளமேடு, கோவை, போத்தனுார், மதுக்கரை, எட்டிமடை, வலையார், கஞ்சிக்கோடு, பாலக்காடு ஜங்ஷன், பாலக்காடு டவுன் ஸ்டேஷன்களுக்கு செல்லாது என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.