/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லாரி - கார் மோதல் மென் பொறியாளர் பலி
/
லாரி - கார் மோதல் மென் பொறியாளர் பலி
ADDED : அக் 26, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தாராபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 34. மென் பொறியாளர்; சர்க்கரை வியாபாரமும் செய்து வருகிறார். மனைவி, ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இவர் காங்கயம் - சென்னிமலை ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். ஆவளங்காளிபாளையம் பிரிவு அருகே காருக்கு முன்னால், சென்றிருந்த டூவீலர் திடீரென வலது புறமாக திரும்பியது. உடனே, பிரகாஷூம் காரை திருப்பினார். எதிர் திசையில் வந்த லாரி, கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.