தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாய் தொல்லைக்கு தீர்வு காண முயற்சி

 நாய் தொல்லைக்கு தீர்வு காண முயற்சி

 நாய் தொல்லைக்கு தீர்வு காண முயற்சி


ADDED : செப் 26, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கயம்: காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊரகப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, விவசாயத் தோட்டங்களுக்குள் புகும் தெருநாய்கள், பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடுகளைக் கடித்துக் கொல்வது தொடர் கதையாகி வருகிறது.

இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், கலெக்டர் உத்தரவுப்படி, ஊரகப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யத் திட்ட மிடப்பட்டுள்ளது.

தெருநாய்களைப் பிடிக்கத் தேவையான ஆட்கள், இடம் மற்றும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு, காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.), காங்கயம் நகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கான அனைத்து செலவினங்களையும் ஊராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம் அதேபோல், ஊரகப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கால்நடை மருத்துவமனைகள் வாயிலாக தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி, தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான தேதிகளை நிர்ணயிக்குமாறு காங்கயம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு ஊராட்சி மன்றத்தின் மூலம் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை கிராமப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி முகாம்கள் மற்றும் உரிமம் வழங்கும் பணிகளின்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து உடனடியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மண்டல துணை பி.டி.ஓ.க்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பி.டி.ஓ. சார்பில் அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us