ADDED : ஜன 17, 2026 05:21 AM

திருப்பூர்: டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி கிரிக்கெட், நேற்று நடந்த முதல் போட்டியில், ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணியை, 109 ரன் வித்தியாசத்தில், கோவா, ஆக்ஸ்போர்டு கிளப் அணியை வென்றது.
அகில இந்திய கிரிக்கெட், பதினாறு வயதுக்கு உட்பட்டோர், டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி - 2026 கிரிக்கெட் போட்டி, திருப்பூர் முருகம்பாளையம், ஒயர்ஸ் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில், கடந்த, 11ம் தேதி முதல் நடந்து வருகிறது.
நேற்று நடந்த முதல் போட்டியில், ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி, 30 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 208 ரன் எடுத்தது. பேட்ஸ்மேன் பிரின்ஸ், 42 பந்தில், 56 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்ரித்ரெட்டி, 52 ரன் எடுத்தார்.
இலக்கை விரட்டிய, கோவா, ஆக்ஸ்போர்டு கிளப் அணி, 22.3 ஓவரில், 99 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, பர்ஹான்டாஷ் மட்டும், 36 ரன் எடுத்தார்.
நான்கு ஓவர் வீசி, 14 ரன் கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய, ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி பவுலர் ரித்விக் ருத்ர நிஷாங்கி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 109 ரன்கள் வித்தியாசத்தில், ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இரண்டாவது போட்டியில், ஆந்திரா, ஏ.டி.சி.ஏ. அனந்தபூர் அணி - புனே, கிரிக்கெட் நெக்ஸ்ட் அகடாமி அணிகள் மோதின. ஆந்திரா, அனந்தப்பூர், ஏ.டி.சி.ஏ. அணி, டாஸ் வென்று பேட்டிங் செய்தது. 30 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 262 ரன் குவித்தது. பேட்ஸ்மேன், ஹரிகிருஷ்ணன், 85 பந்துகளில், சதமடித்து அசத்தினார்.
கடின இலக்கை விரட்டிய, புனே கிரிக்கெட் நெக்ஸ்ட் அகாடமி அணி, 30 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 118 ரன் எடுத்தது. 144 ரன் வித்தியாசத்தில், ஆந்திரா, அனந்தப்பூர், ஏ.டி.சி.ஏ. அணி வெற்றி பெற்றது.
இன்று அரையிறுதி டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி தொடரில், அணிகள் பங்கேற்று விளையாடின. வெற்றி புள்ளிகள் அடிப்படையில் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்று நடக்கும் முதல் அரையிறுதியில், போட்டியை நடத்தும் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் - கோவா, ஆக்ஸ்போர்டு கிளப் அணியும், இரண்டாவது அரையிறுதியில், ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி - கேரளா, ஆர்.எஸ்.ஜி.எஸ்.ஜி. அணியும் மோதுகிறது.
நாளை (18 ம் தேதி) டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி கோப்பைக்கான இறுதி போட்டி நடைபெறும்.
