காசநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்
காசநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்
ADDED : செப் 15, 2026 04:05 AM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லூரியில், காசநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை அரசு மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 'எச்ஐவி' பால்வினை நோய் மற்றும் காசநோய் பற்றிய தீவிர விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. கல்லுாரி முதல்வர் மலர்வண்ணன் தலைமை வகித்தார்.
டாக்டர் வசந்த், அரசு மருத்துவமனை ஆலோசகர் மணிகண்டராஜ், ஆய்வுக்கூட நிபுணர் வினோத்குமார், மூத்த காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் குமரேசன் ஆகியோர் எச்.ஐ.வி., மற்றும் காசநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர், மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
