/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காசநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
/
காசநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : நவ 25, 2024 11:04 PM
திருப்பூர்; வரும், 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் என காசநோய் தடுப்பு திட்ட பணி நடைபெற்று வருகிறது.
சிகிச்சை விரிவுபடுத்தும் வகையில் தொடர் மருந்து, சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அவர்கள் வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது. வீட்டிலேயே சளிமாதிரி எடுப்பது, தேவைப்படுவோருக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுத்து, சிகிச்சைக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.
திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 'காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட அளவில் ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை அறிய, மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தி, அறிக்கையளிக்க வேண்டும்' என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.