ADDED : ஜன 20, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மது விலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் சோதனை நடத்தினர்.
அப்போது வெளியே வந்த இருவரிடம் சோதனை செய்ததில், 8.75 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், விருதுநகரைச் சேர்ந்த பழனிவேல், 24, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ்கண்ணா, 33 என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா மூட்டைகளைபறிமுதல் செய்தனர்.