UPDATED : அக் 11, 2026 09:42 PM
ADDED : அக் 11, 2026 09:36 PM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான 35 பன்றிகளைத் திருடிய வழக்கில் இருவரைக் கைது செய்த போலீசார், பன்றிகள் மற்றும் பிக்கப் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
கோடங்கிபாளையத்தைச் சேர்ந்த கலாமணி என்பவருக்குச் சொந்தமான பன்றிப் பட்டியில் கடந்த செப். 14-ம் தேதி 35 பன்றிகள் திருடுபோயின. புகாரின்பேரில் விசாரித்த பல்லடம் போலீசார், அவிநாசி சிந்தாமணி பகுதியில் பன்றிகளுடன் சென்ற பிக்கப் வாகனத்தைச் சோதனையிட்டு, அவிநாசியைச் சேர்ந்த மணிகண்டன், 36, ஈரோடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த சங்கர், 28 ஆகியோரைக் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
