ADDED : ஆக 25, 2025 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அருகே, 11 ஆண்டாக குடும்பத்தினருடன் தங்கியிருந்த வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம் அடுத்த, அறிவொளி நகரில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், வங்கதேசத்தை சேர்ந்த முகமது சோகன், 29; முகமது தமீம் உசேன், 24 ஆகியோரை கைது செய்தனர். இருவரும் கடந்த, 11 ஆண்டுகளாக அறிவொளி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இருவரது ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வங்க தேச நாட்டினர் என்பதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீசார், இருவரது கைரேகை, தழும்புகள் உள்ளிட்ட அங்க அடையாளங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.