/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.50,000க்கு துப்பாக்கி விற்ற இரு பீஹார் வாலிபர்கள் கைது
/
ரூ.50,000க்கு துப்பாக்கி விற்ற இரு பீஹார் வாலிபர்கள் கைது
ரூ.50,000க்கு துப்பாக்கி விற்ற இரு பீஹார் வாலிபர்கள் கைது
ரூ.50,000க்கு துப்பாக்கி விற்ற இரு பீஹார் வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 01, 2025 12:13 AM

திருப்பூர்:
திருப்பூரில் நாட்டு துப்பாக்கிகளுடன் பீஹார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு பகுதியில், துப்பாக்கி விற்பனையில் இருவர் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மொபைல் போன் எண்ணை பெற்ற போலீசார், துப்பாக்கி குறித்த விபரங்களை கேட்டு தங்களுக்கு தேவைப்படுவதாக கூறினர். போலீஸ் கூறியபடி குப்பாண்டம்பாளையத்துக்கு இருவர் வந்தனர்.
அவர்கள், பீஹாரைச் சேர்ந்த ஜாகீர் அன்வர், 26, ரவிராஜ், 25, என்பதும், சுண்டமேட்டில் தங்கி, பனியன் நிறுவனம், கட்டுமான பணிக்கு வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. ஒரு மாதம் முன்பு சொந்த ஊர் சென்றபோது, தலா 7,500 ரூபாய்க்கு இரு நாட்டு துப்பாக்கிகளை விலைக்கு வாங்கி, திருப்பூரில் விற்பதற்காக கொண்டு வந்தனர்.
ஒரு துப்பாக்கி, 50,000 ரூபாய் என விலை பேசியது தெரியவந்தது. அவர்கள் அறையில் இரு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.