/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுச்சாவடி மையங்களில் இரு நாட்கள் உதவி மையம்
/
ஓட்டுச்சாவடி மையங்களில் இரு நாட்கள் உதவி மையம்
ADDED : நவ 14, 2025 09:30 PM
உடுமலை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக, உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் ஒரு பகுதியாக, ஓட்டுச்சாவடி மையங்களில், இன்றும், நாளையும் உதவி மையம் அமைக்கப்படுகிறது.
இதில், ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வீடு தோறும் கொண்டு வந்து வழங்கப்பட்ட படிவங்களை பெறுதல் மற்றும் படிவங்களை பூர்த்தி செய்யும் பணி, வாக்காளர்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கி உதவுதல் மற்றும் சரிபார்க்கும் பணி, ஓட்டுச்சாவடி மையங்களில், நடக்கிறது.
இதில், பொதுமக்கள் பங்கேற்று, பயன்பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

