தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இரு தொகுதிகளிலும் இரு நாட்கள் சிறப்பு முகாம்

இரு தொகுதிகளிலும் இரு நாட்கள் சிறப்பு முகாம்

இரு தொகுதிகளிலும் இரு நாட்கள் சிறப்பு முகாம்


UPDATED : நவ 23, 2026 05:04 PM

ADDED : நவ 23, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 05:04 PM ADDED : நவ 23, 2026 05:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளிலுள்ள, 603 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் மேற்கொள்ள, இரு நாட்கள் நடந்த முகாமில், 492 பேர் புதிதாக இணைய விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய தேர்தல் கமிஷன், 2027 ஜன.,1, தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த, 12ம் தேதி வெளியிடப்பட்டது.

உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 865 ஆண்கள், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 651 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2 லட்சத்து, 32 ஆயிரத்து, 543 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 3 ஆயிரத்து, 776 ஆண்கள், ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 365 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 16 ஆயிரத்து, 158 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள், வரும், டிச., 12 வரை நடக்கிறது. ஓட்டுச்சாவடி மையங்களில், நேற்று முன் தினமும், நேற்றும் சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், உடுமலை தொகுதியில், 132 ஓட்டுச்சாவடி மையங்களில், 307 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன.

இதில், முதல் நாளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 97 பேரும், இரண்டாம் நாளில், 152 பேரும் என, மொத்தம், 249 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதே போல், இரு நாட்களிலும் பெயர் நீக்கம் செய்ய, 18 பேரும், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, 322 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

மடத்துக்குளம்



மடத்துக்குளம் தொகுதியில், 118 ஓட்டுச்சாவடி மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன. முதல் நாளில், 107 பேரும், இரண்டாம் நாளில், 136 பேர் என, இரு நாட்களில், 243 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய, படிவம்–6 வழங்கியுள்ளனர்.

அதே போல், பெயர் நீக்கம் செய்ய, இரு நாட்களிலும், 60 பேரும், திருத்தங்கள் மேற்கொள்ள, 192 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இரு தொகுதிகளிலும் நடந்த முகாம்களில், சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, மொத்தம், 1,084 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய, 492 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மூன்றாவது முகாம்



தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் உத்தரவு அடிப்படையில் இரு நாட்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. மூன்றாவது முகாம், வரும், 29ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் கமிஷன் இணைய தளம் https://voterportal.eci.gov.in மற்றும் ECINET என்ற மொபைல் செயலி வாயிலாகவும், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளலாம்’.

‘விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, 2027 ஜன., 4ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us