/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில் மேலும் இருவர் பலி ஒருவரின் கண் - தோல் தானம்
/
விபத்தில் மேலும் இருவர் பலி ஒருவரின் கண் - தோல் தானம்
விபத்தில் மேலும் இருவர் பலி ஒருவரின் கண் - தோல் தானம்
விபத்தில் மேலும் இருவர் பலி ஒருவரின் கண் - தோல் தானம்
ADDED : ஜன 20, 2024 01:07 AM
திருப்பூர்:திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் பைக் மீது கார் மோதி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் மரணம் அடைந்தனர்.
திருப்பூர், முருகம்பாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன், 30; இவரது மனைவி சந்தியா, 20. இந்த தம்பதிக்கு பிருத்விக் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். கடந்த 14ம் தேதி மூவரும் பைக்கில் சொந்த ஊரான மேட்டூருக்கு சென்றனர்.
ஊத்துக்குளி, புலவர்பாளையம் அருகே, விஜயமங்கலத்தில் இருந்து திருப்பூர் வந்த கார், பைக் மீது மோதியது. மேலும், அங்கிருந்த நுால் மில்லுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 3 வயது குழந்தை பியூட்டி குமாரி மீதும் மோதியது.
பைக்கில் இருந்த சந்தியா மற்றும் விளையாடி கொண்டிருந்த பியூட்டி குமாரி ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த முகுந்தன், பிருத்விக் மற்றும் காரை ஓட்டி வந்த விக்னேஷ், 30, மற்றும் உடனிருந்த செல்வம், 30, கிருஷ்ணமூர்த்தி, 42 ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கபப்பட்டனர்.
இவர்களில், பெருந்துறையில் சிகிச்சையில் இருந்த முகுந்தன் மற்றும் கோவையில் சிகிச்சையில் இருந்த டிரைவர் விக்னேஷ் ஆகியோர் மரணம் அடைந்தனர்.
முகுந்தனின் பெற்றோர், மகனின் கண்களை கோவையில் உள்ள அரசன் கண் மருத்துவமனைக்கும், தோலை கங்கா மருத்துவமனைக்கு தானம் செய்தனர்.