/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்களுக்கு உணவு வழங்கல் இரு தரப்பினர் வாக்குவாதம்
/
நாய்களுக்கு உணவு வழங்கல் இரு தரப்பினர் வாக்குவாதம்
நாய்களுக்கு உணவு வழங்கல் இரு தரப்பினர் வாக்குவாதம்
நாய்களுக்கு உணவு வழங்கல் இரு தரப்பினர் வாக்குவாதம்
ADDED : ஜூன் 04, 2025 02:05 AM

திருப்பூர், ; தெரு நாய்களுக்கு உணவு வழங்கிய விவகாரத்தில் இரு தரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர், காவிலிபாளையம் கிரீன் லேண்ட் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். நேற்று, தனது வீதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கினார். அப்போது, 10, 15 நாய்கள் அங்கு கூடியதாக கூறப்படுகிறது.
இந்த நாய்கள், அவ்வழியாக செல்லும் மக்களை விரட்டுவது, வளர்ப்பு கால்நடைகளை கடிப்பது என, இடையூறு ஏற்படுத்துவதால், உணவு வழங்க வேண்டாம் என, மோகன் குமாரிடம் குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர்.
இதில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, விவகாரம், 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது. மோகன்குமாருக்கு ஆதரவாக, சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் குவிந்த நிலையில் பரபரப்பு அதிகமானது.
'பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தெரு நாய்க்கு உணவு வழங்குங்கள்,' என, போலீசார் அறிவுறுத்தினர். இரு தரப்பினரும் புகார் வழங்கியதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.