/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாராபுரம் அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் குளித்த 2 பேர் பலி
/
தாராபுரம் அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் குளித்த 2 பேர் பலி
தாராபுரம் அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் குளித்த 2 பேர் பலி
தாராபுரம் அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் குளித்த 2 பேர் பலி
ADDED : நவ 09, 2025 05:06 AM
தாராபுரம்:தாராபுரம்
அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் குளித்த, வாலிபர் மற்றும் சிறுமி,
தண்ணீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர்
மாவட்டம் தாராபுரம், சுல்தானியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஹசன்,
32; சோளக்கடை வீதியில் ரொட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது உறவினர்
திருமணம், தாராபுரத்தில் கடந்த, 6ம் தேதி நடந்தது. திருமண வரவேற்பு
நிகழ்ச்சி தாராபுரத்தில் நேற்று மாலை நடப்பதாக இருந்தது. இதற்காக
உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் ஹசன்,
அவரது உறவினர் பாரூக், 37, சகோதரர் மகள் தாஹிரா,13, ஜன்னத்துல்
பிர்தவ்ஸ்,14, முகமது அஷ்ரப் அலி, 35, முகமது ஜசிம் 11, நஸ்ரியா, 11,
மற்றும் ஏழு வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகள் என, 12 பேர்,
தாராபுரத்தை அடுத்த செலாம்பாளையம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணை
பகுதிக்கு குளிக்க நேற்று காலை, 11:00 மணியளவில் சென்றனர்.
உற்சாகமாக குளித்து கொண்டிருந்தபோது, அருவிபோல் நீர் விழும்
இடத்தில் செல்பி எடுத்தனர்.
அப்போது ஹசனின் அண்ணன் மகள் தாஹிரா நீரில்
விழுந்து மூழ்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஹசன், அவரை
காப்பாற்ற குதித்தார். ஹசனுக்கு நீச்சல் தெரியாததால் அவரும்
மூழ்கினார். மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்ட நிலையில்,
தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்தனர். இருவரது உடலையும்
அடுத்தடுத்து மீட்டனர். குளிக்க சென்ற இடத்தில் இருவர் பலியானது,
திருமணத்துக்கு வந்த உறவினர்களை, மாளாத சோகத்தில் ஆழ்த்தியது.

