ADDED : நவ 05, 2024 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில், உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் செயல்படுகிறது.
இம்மையத்தில், டி.என்.பி.எஸ்.சி உட்பட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு பல்வேறு கல்லுாரி பேராசிரியர்கள் வாயிலாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
இதில் பயிற்சி பெற்ற இருவர், நேற்று வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற சந்தோஷ்குமார், மாலதி ஆ�யோருக்கு பயிற்சி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பயற்சி மைய நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

