/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர் மெக்கானிக் இலவச பயிற்சி
/
டூவீலர் மெக்கானிக் இலவச பயிற்சி
ADDED : ஜூலை 21, 2025 09:55 PM
உடுமலை; திருப்பூர் - காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், டூவீலர் மெக்கானிக் பயிற்சி வகுப்பு, நாளை (23ம் தேதி) துவங்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும், ஊராட்சிக்கு உட்பட்ட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, எழுத படிக்க தெரிந்த, ஆண், பெண், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இருபாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதி வசதி உள்ளது. காலை, மாலை டீ, உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிப்போருக்கு, மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்க கடன் ஆலோசனைகளும் அளிக்கப்படுகிறது.
விருப்பமுள்ளோர், 'கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர்' என்கிற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 94890 43923, 90804 42586 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.