/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் டூவீலர்கள், 15 சதவீதம் அதிகரிப்பு; 2024ம் ஆண்டில் 31,043 வாகனங்கள் பதிவு
/
திருப்பூரில் டூவீலர்கள், 15 சதவீதம் அதிகரிப்பு; 2024ம் ஆண்டில் 31,043 வாகனங்கள் பதிவு
திருப்பூரில் டூவீலர்கள், 15 சதவீதம் அதிகரிப்பு; 2024ம் ஆண்டில் 31,043 வாகனங்கள் பதிவு
திருப்பூரில் டூவீலர்கள், 15 சதவீதம் அதிகரிப்பு; 2024ம் ஆண்டில் 31,043 வாகனங்கள் பதிவு
ADDED : ஜன 04, 2025 12:36 AM

திருப்பூர்: திருப்பூரில் டூவீலர் வாகனப்பதிவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சாலையில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 2023ம் ஆண்டில், 12 ஆயிரத்து, 137 டூவீலர் பதிவு செய்யப்பட்டன. 2024ல், 13 ஆயிரத்து, 592 டூவீலர், 403 மொபட் என, 13 ஆயிரத்து, 995 வாகனங்கள் புதிய பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் புதிய வாகனப்பதிவு, 1,858 அதிகரித்துள்ளது.
திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 2023ல், 15 ஆயிரத்து, 658 ஆக இருந்த புதிய டூவீலர் பதிவு, 2024 ம் ஆண்டு, 17 ஆயிரத்து, 048 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, முந்தைய ஆண்டை விட, 2024ம் ஆண்டு, 1,390 வாகனங்கள் கூடுதலாக பதிவாகியுள்ளன. மொத்த வாகனப்பதிவில், 10 முதல், 15 சதவீதம் வரை டூவீலர் அதிகரித்துள்ளது. பிற வாகனங்களை விட திருப்பூரில் டூவீலர் அதிகமாக உள்ளது. வெளியூரில் இருந்து திருப்பூருக்கு தினசரி வந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிய வாகனப்பதிவு, ஏற்கனவே உள்ள வாகனங்கள் எண்ணிக்கையால் திருப்பூரின் முக்கிய சாலைகளில் எங்கு திரும்பினாலும், டூவீலர் மயமாகவே காட்சியளிக்கிறது.
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
நகருக்குள், வாகனங்கள் வேக வரம்பு, 30 - 40 கி.மீ., என்ற அளவில் உள்ளது. கனரக வாகனங்களை பொறுத்தவரை பெரும்பாலும் வேக வரம்பை மீறுவதில்லை. போக்குவரத்து நெரிசல் பிரதானமான காரணமாக இருப்பதால், வேகமெடுக்க முயற்சித்தாலும், அடுத்த சில நொடிகளுக்குள்ளாகவே வாகன வேகத்தை குறைக்க வேண்டியுள்ளது.
விதிமுறை மீறுவோரில், டூவீலர் ஓட்டிகள் தான் அதிகமாக இருக்கின்றனர். ஒரு வழிப்பாதையில் முன்னேறி செல்வது, வழியில்லை என்று தெரிந்தும் இடதுபுறம் முன்னேறி செல்வது, குறுகலான சாலையிலும் வலதுபுறம் முன்னேறிச் சென்று உள்ளிட்ட பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள், சிறுவர், சிறுமியர் லைசன்ஸ் பெறாமல், சாலைவிதி தெரியாமல் வாகனம் இயக்குகின்றனர்.
இதனால், விபத்துக்கள் ஏற்படுகிறது. ெஹல்மெட் அணிந்து விட்டால் மட்டும் சாலை போக்குவரத்து விதிமுறை பின்பற்றியதாக அர்த்தமில்லை.
பாதுகாப்பாக, கவனமுடன், செயலாற்றினால் மட்டுமே விபத்துக்கள் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.