/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; இன்று நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
/
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; இன்று நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; இன்று நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா; இன்று நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
ADDED : மார் 31, 2025 09:51 PM

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும், 17ம் தேதி நடக்கிறது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இன்று துவங்குகிறது. இன்று மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 7:00 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 8ம் தேதி, இரவு, 8:15 மணிக்கு, கம்பம் போடுதல், 10ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, வாஸ்துசாந்தி, கிராமசாந்தி, 11ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு, பூவோடு ஆரம்பம் 15ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு பூவோடு நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது.
16ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு, பிற்பகல், 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம், வரும், 17ம் தேதி, மதியம், 4:15 மணிக்கு நடக்கிறது.
வரும் 18ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்கு, குட்டை திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
19ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கொடியிறக்கம், 11:00 மணிக்கு, மகா அபிேஷகம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, மாலை, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, 11ம் தேதி முதல், 18ம் தேதி வரை, தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், தினமும் ஆன்மிக பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.