/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கோணம் சந்திப்பை கடக்க முடியல! கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறையினர்
/
முக்கோணம் சந்திப்பை கடக்க முடியல! கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறையினர்
முக்கோணம் சந்திப்பை கடக்க முடியல! கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறையினர்
முக்கோணம் சந்திப்பை கடக்க முடியல! கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறையினர்
ADDED : ஜூன் 11, 2025 08:10 PM

உடுமலை; முக்கோணம் ரோடு சந்திப்பில், ரவுண்டானா அமைக்காத நிலையில், போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது; எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, ஆனைமலை - உடுமலை ரோடு சந்திக்கும் சந்திப்பு பகுதி முக்கோணத்தில் அமைந்துள்ளது. அருகிலேயே பஸ் ஸ்டாப்பும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால், ஆனைமலை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், உடுமலைக்கு செல்ல நெடுஞ்சாலையில் திரும்பும் போது விபத்துகள் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலையில் இணைய வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், ஆனைமலை ரோட்டிலும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், நெடுஞ்சாலையில் உடுமலைக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் போது, சந்திப்பு பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். காலை, மாலை நேரங்களில், முக்கோணத்தை கடக்க அனைத்து வாகன ஓட்டுநர்களும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
தற்காலிக தீர்வாக, எச்சரிக்கை பலகைகள், தானியங்கி சிக்னல் உள்ளிட்ட கட்டமைப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்படுத்த வேண்டும். நிரந்தர தீர்வாக, ரவுண்டானா அமைத்து விபத்துகளை தவிர்க்க, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.