sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகராட்சிக்கு வாடகை செலுத்த  முடியாது! மார்க்கெட் வியாபாரிகள் அறிவிப்பு

/

நகராட்சிக்கு வாடகை செலுத்த  முடியாது! மார்க்கெட் வியாபாரிகள் அறிவிப்பு

நகராட்சிக்கு வாடகை செலுத்த  முடியாது! மார்க்கெட் வியாபாரிகள் அறிவிப்பு

நகராட்சிக்கு வாடகை செலுத்த  முடியாது! மார்க்கெட் வியாபாரிகள் அறிவிப்பு


UPDATED : ஜன 21, 2026 07:43 AM

ADDED : ஜன 21, 2026 06:50 AM

Google News

UPDATED : ஜன 21, 2026 07:43 AM ADDED : ஜன 21, 2026 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த மாட்டோம் என, அனைத்து வணிகர் சங்கம் சார்பில், பல்லடம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து, மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:

பல்லடம், என்.ஜி.ஆர். ரோட்டில் இயங்கும் தினசரி மார்க்கெட் வியாபாரிகளிடம், 10 ஆண்டுகளுக்கு முன் பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை மற்றும் மூன்று ஆண்டுக்கு முன் அரசு அறிவித்த கொரோனா கால வாடகை தள்ளுபடி தொகையை வழங்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், போராட்டங்கள் நடத்தியும், இன்றுவரை வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படவில்லை.

எங்களின் வயிற்றில் அடிப்பது நியாயம்தானா? மேலும், தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்காக, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. எனவே, இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் மாத வாடகையை நகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்த மாட்டோம் தேவைப்பட்டால், போராட்டங்களையும் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொரோனா கால வாடகை தள்ளுபடி, அட்வான்ஸ் தொகையை திருப்பி தருவது மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீபத்தில், தினசரி மார்க்கெட் வியாபாரிகள், என்.ஜி.ஆர்., ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அதிருப்தி அடைந்த வியாபாரிகள் இந்த அறிவிப்பு பலகையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us