/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பில்லாத கண்காணிப்பு 'கேமரா'
/
கண்காணிப்பில்லாத கண்காணிப்பு 'கேமரா'
ADDED : ஜூன் 09, 2025 11:51 PM

திருப்பூர்; வீரபாண்டி பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்துள்ளதால் கண்காணிப்பு பணியில் தொய்வு தென்படுகிறது.
திருப்பூர் மாநகர பகுதியில் பல்வேறு பகுதிகளிலும், பிரதான ரோடுகள், அதிகளவிலான மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பகுதி வாரியாக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் - வீரபாண்டி பஸ் ஸ்டாப்பில் அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானாவில், நான்கு திசைகளிலும் ரோட்டை நோக்கிய வண்ணம் இந்த கண்காணிப்பு கேமராக்கள் சில ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டது.
சமீபத்தில், அந்த வழியாக சென்ற ஒரு கனரக வாகனம், எதிர்பாராத விதமாக கண்காணிப்பு கேமரா அமைந்திருந்த கம்பத்தில் உரசியதில், கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தது.
தற்போது இந்த கேமராக்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக கழன்று தொங்கிய நிலையில் உள்ளது.
செயலிழந்த நிலையில் உள்ள கேமராக்களை பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; அதைக் கண்டுக்கொள்ளவும் யாரும் முன்வரவில்லை. தற்போதைய சூழலில், கண்காணிப்பு கேமராக்கள் அவசியமானதாக மாறியிருக்கிறது.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், பெரும்பாலும், கேமரா கண்காணிப்பின் அடிப்படையில் தான் பிடிபடுகின்றனர்.
எனவே, முக்கியமான சாலை சந்திப்பு, பஸ் ஸ்டாப், அரசு பள்ளிகள் உள்ள இடத்தில் பழுதாகியுள்ள கண்காணிப்பு கேமராவை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.