/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி நீர் வழங்கல்
/
பி.ஏ.பி., மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி நீர் வழங்கல்
பி.ஏ.பி., மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி நீர் வழங்கல்
பி.ஏ.பி., மண்டல பாசனத்திற்கு இடைவெளியின்றி நீர் வழங்கல்
ADDED : ஆக 22, 2025 11:51 PM
உடுமலை: பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, இரண்டாம் சுற்றுக்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வருகிறது.
பி.ஏ.பி., நான்காம் மண்டலத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94,068 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூலை 27ல் திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
வரும், டிச., 9ம் தேதி வரை, 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, 5 சுற்றுகளாக, மொத்தம், 10,250 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பருவ மழை பெய்து வரும் நிலையில், திருமூர்த்தி அணையில் திருப்தியான நீர் இருப்பு உள்ளதாலும், முதல் சுற்று முடிவடைந்த நிலையில், இடைவெளியின்றி இரண்டாம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையின் மொத்தமுள்ள, 60 அடியில், 51.01 அடி நீர் மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 1,744.15 மில்லியன் கனஅடியில், 1,367.34 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.
அணைக்கு, வினாடிக்கு, 888 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 738 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் கூறுகையில்,'அணை நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால், முதல் சுற்றுக்கும், இரண்டாம் சுற்றுக்கும் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருகிறது,' என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பிரதான மற்றும் கிளைக்கால்வாய்களில் இந்த சுற்றில், தண்ணீர் திருட்டை தடுக்க, அனைத்துத்துறைகள் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து செல்ல வேண்டும்' என்றனர்.