ADDED : செப் 30, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்அபிராமி, பி.டி.ஓ., விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், துளசி மணி (தி.மு.க.,) பேசுகையில், ''முதியாநெரிசல் பகுதிக்கு அத்திக்கடவு தண்ணீர் வரவில்லை,'' என்றார்.
பதிலளித்த, ஊராட்சி ஒன்றிய தலைவர் குமார், ''கோவை - திருச்சி ரோடு போடுவதால் பைப் லைன் உடைந்து விடுகிறது. விரைவில் சரியாகி விடும். பல இடங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது.
வறட்சி நிவாரண நிதி மூலம் போர்வெல் போடப்படும். 800 அடி போட மட்டுமே நமக்கு அனுமதி உள்ளது.ஆயிரம் அடியில் தண்ணீர் உள்ளது. ஆழத்தை அதிகப்படுத்த கலெக்டரிடம் அனுமதி கேட்டுள்ளோம்,'' என்றார்.