/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பதில்லை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்
/
குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பதில்லை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்
குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பதில்லை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்
குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பதில்லை ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்
ADDED : நவ 29, 2024 11:30 PM

உடுமலை: 'அனைத்து ஊராட்சிகளிலும், குடிநீர் பிரச்னைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை' என ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
உடுமலை ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிக்குழு தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் சுரேஷ்குமார், சிவகுருநாதன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய நிர்வாக செலவினங்கள், தளி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடங்களை பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்தல்,
பெரியவாளவாடியில் உள்ள வணிக வளாக கடைகள் ஏலம் எடுக்கப்பட்டதற்கான அங்கீகாரம் பெறுதல், ஒன்றிய நிர்வாக அலுவலக கட்டடத்தை அப்புறப்படுத்துதல் உட்பட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் பேசியதாவது: கணக்கம்பாளையத்தில், குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவதில்லை. முதலில் வாரத்துக்கு ஒரு முறையாக இருந்தது. இப்போது இருபது நாட்கள் வரை, குடிநீர் வினியோகம் இல்லை. அனைத்து ஊராட்சிகளிலும், குடிநீர் பிரச்னைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
ஊராட்சிகளில் ஒரு பகுதியில் தேவைக்கு அதிகமாகவும், மற்ற பகுதியில் தட்டுப்பாடான நிலையிலும் குடிநீர் வினியோகம் உள்ளது. பொதுமக்கள் குடிநீர் தேவைக்கு மிகவும் அவதிப்படுகின்றனர்.
அமராவதிநகரில் சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். அணையை சுற்றிப்பார்க்க வருவோருக்கு அடிப்படையான கழிப்பிட வசதி இல்லை. ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், அமராவதி நகரில் பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
பி.டி.ஓ.,க்கள் கூறியதாவது: கணக்கம்பாளையம் உட்பட கிராமங்களில், குடிநீர் வினியோகம் குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வடிகால் வாரியத்தில் இதுகுறித்து விசாரிக்கப்படும். அமராவதி நகரில் பொதுக்கழிப்பிடம் கட்டுவது குறித்து, முறையாக கடிதம் வைத்த பின்னர், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.