/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடை விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' போராட்டம் நடத்த சங்கத்தினர் முடிவு
/
ரேஷன் கடை விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' போராட்டம் நடத்த சங்கத்தினர் முடிவு
ரேஷன் கடை விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' போராட்டம் நடத்த சங்கத்தினர் முடிவு
ரேஷன் கடை விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' போராட்டம் நடத்த சங்கத்தினர் முடிவு
ADDED : மே 30, 2025 01:17 AM
திருப்பூர், ; சர்க்கரையில் மாவு கலந்ததாக எழுந்த சர்ச்சையில், பொம்மநாயக்கன்பாளையம் ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து, ரேஷன் கடை பணியாளர் சங்கம், இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து, ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், உணவுத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்:
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் குடோனிலிருந்து, பொம்மநாயக்கன்பாளையம் ரேஷன் கடைக்கு, தரமற்ற சர்க்கரை அனுப்பப்பட்டுள்ளது. சர்க்கரையில் மாவு கலந்துள்ளது என்கிற அடிப்படையில், விற்பனையாளர் பிரவின் பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; இந்த நடவடிக்கை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வழக்கமாக எடை குறைவாகவும், சர்க்கரையின் தரத்தை பரிசோதிக்காமல் வினியோகத்துக்கு அனுப்பிய தர கட்டுப்பாடு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடோனுக்கு சென்று எடை, தரம் குறித்து ஆய்வு செய்யாத கூட்டுறவு சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில், அனைத்து ரேஷன்கடைகளுக்கும் வினியோகத்துக்கு அனுப்பப்பட்ட அனைத்து சர்க்கரை மூட்டைகளையும் குடோனுக்கு திருப்பி எடுத்துக்கொள்ளவேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், அங்கேரிபாளையம் குடோன் முன்பு, வரும், 30ம் தேதி (இன்று), மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.