மத்திய அமைச்சர் முருகன் அவிநாசியில் சுவாமி தரிசனம்
மத்திய அமைச்சர் முருகன் அவிநாசியில் சுவாமி தரிசனம்
ADDED : மார் 20, 2026 09:59 PM
அவிநாசி:அவிநாசியிலுள்ள காசி விநாயகர் கோவிலில் மத்திய இணை அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவிநாசி, சேவூர் ரோட்டில், கிழக்கு ரத வீதியில் உள்ள பழமையான ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில், மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, அவரை, மாநில பா.ஜ. செயலாளர் நந்தகுமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் சண்முகம், தொகுதி இணை அமைப்பாளர் கதிர்வேலன், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம், நகர தலைவர் ரமேஷ் உட்பட பலர் வரவேற்றனர்.
கோவிலில், பிரதமர் மோடி பெயருக்கு, முருகன் அர்ச்சனை செய்தார். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் சிவகுமார், தியாகராஜன் ஆகியோர் அமைச்சர் முருகனுக்கு பரிவட்டம் கட்டி, விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கினர். அவிநாசி (தனி) தொகுதியில், முருகன் போட்டியிடக்கூடும் என பா.ஜ.வினர் கூறி வரும் நிலையில், அவரின் வருகை, முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
