/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஒற்றுமையே பலம்; பெருகுமே வளம்'
/
'ஒற்றுமையே பலம்; பெருகுமே வளம்'
ADDED : செப் 22, 2024 05:35 AM

'நான்' என்பதை காட்டிலும், 'நாம்' என்ற வார்த்தைக்கு வலிமை அதிகம். பல நேரங்களில் இதுபோன்ற கூட்டு முயற்சிக்கு, கை மேல் பலன் கிடைக்கும். அப்படியான ஒரு முயற்சியை தான், திருப்பூர் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மேற்கொண்டனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை ஒன்றிணைத்து வழிநடத்தும் பொறுப்பு, குடியிருப்போரை உள்ளடக்கிய குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் ஒருங்கிணைப்பும், ஒற்றுமையும் பலமிழந்து இருப்பதால், சங்கங்கள் வலுவிழந்தே உள்ளன.
இதில், திருப்பூர் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம், வலுவுடன் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் முயற்சியால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், குடியிருப்பில் வசிக்கும், 50 பெண்களுக்கு செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
''பெண்களின் பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புக்கு பல்வேறு உதவிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் செய்கின்றனர். சங்கம் வலிமையுடன், குடியிருப்புவாசிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இத்தகைய வாய்ப்பு பெற முடியும். இது, எங்களின் முதல் முயற்சி. வரும் நாட்களில் இதுபோன்று பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்கின்றனர் நலச்சங்க தலைவர் ராம்குமார், செயலாளர் பழனிகுமார்.