/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாணவர்களிடம் ஒற்றுமை வேரூன்றி இருக்க வேண்டும்'
/
'மாணவர்களிடம் ஒற்றுமை வேரூன்றி இருக்க வேண்டும்'
ADDED : ஜூலை 15, 2025 10:42 PM

திருப்பூர்; திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், ராக்கிங் தடுப்பு குழு மற்றும் தர உறுதி குழு சார்பில், 'ராக்கிங்' எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பட்டியல் வக்கீல் அன்புச்செல்வி பேசுகையில், ''ராக்கிங் என்பது ஒரு குற்றச்செயல் மட்டுமல்ல; மாணவரின் மன நலத்தையும், நம்பிக்கையையும் பாதிக்கும் செயலாகும். ஒற்றுமையும், மதிப்பு மிகுந்த நடப்புகளும், மாணவர் சமூகத்தில் வேரூன்றி இருக்க வேண்டும். நீதித்துறை அமைப்புகள், மாணவர்களுக்கு எப்போதும் துணையா இருக்கும்,'' என்றார்.
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் வெங்கடேஷ் பேசுகையில், ''நாகரீகத்தை வெளிப்படுத்தும், ஒழுங்கமைக்கப்பட்ட பழக்க வழக்கம் தான், உங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கும்; கல்வி கட்டமைப்பில், ராக்கிங் இருக்க கூடாது,'' என்றார். முன்னதாக, ராக்கிங் குற்றத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விளக்கினார்.
விழுதுகள் அமைப்பின் திட்ட மேலாளர் கோவிந்தராஜ், கல்லுாரி டீன் சம்பத் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, 'ராக்கிங்' தொடர்பான விழிப்புணர்வு படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன; தொடர்ந்து, மாணவ, மாணவியர், ராக்கிங் குற்றத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.