'ஸ்டெண்டர் மெஷின்' உற்பத்தியில்யுனிவர்சல் இன்ஜினியரிங் அசத்தல்
'ஸ்டெண்டர் மெஷின்' உற்பத்தியில்யுனிவர்சல் இன்ஜினியரிங் அசத்தல்
ADDED : மார் 10, 2024 12:34 AM
திருப்பூர்;திருப்பூர் செவந்தாம்பாளைத்தில் உள்ள யுனிவர்சல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிறுவனர் ராஜேந்திரன் கூறியதாவது: எங்கள் நிறுவனம், 'ஆர்ம்டெக்ட்' பிராண்ட் ஸ்டெண்டர் மெஷினை, ஐரோப்பிய தொழில் நுட்ப தரத்துக்கு நிகராக உற்பத்தி செய்து தருகிறது. 1995ம் ஆண்டு முதல் இத்துறையில் உள்ள அனுபவ அடிப்படையில், மெஷின்களை தரமாக வடிவமைக்கிறோம்.
மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை விட 40 சதவீதம் விலை குறைவாக, அதற்கு நிகரான தரத்திலும் வழங்குகிறோம். எளிமையான முறையில் கையாளும் விதமாக உள்ளதால், அடிப்படை தொழிலாளர்களைக் கொண்டு இயக்க முடியும். இதனால், உற்பத்தியாகும் துணியின் தரம் உறுதிப்படுத்துவதோடு, மின் நுகர்வு மற்றும் எரிபொருள் செலவும் குறைவு. உற்பத்தியாளர்கள் இதன் இயக்க ெசலவில் 15 முதல் 25 சதவீதம் வரை மிச்சப்படுத்த முடியும். போட்டி சூழலிலும் லாபம் அதிகம் பெற முடியும். நம்நாட்டிலும் சர்வதேச தரத்துக்கு நிகரான தொழில்நுட்பத்தில் தயாரிக்க முடியும் என்பதை உறுதி செய்துள்ளோம். கூடுதல் விவரங்களுக்கு 75020 11900 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
