ADDED : டிச 13, 2025 07:08 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர், குமரன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் சந்திப்பு அருகில், சுரங்க பாலம் பணி நடப்பதால், வாகனங்கள் யுனிவர்சல் ரோடு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இருப்பினும், சாய்பாபா கோவில் - யுனிவர்சல் ரோடு மாற்றுப் பாதை குண்டும் குழியுமாக இருந்தது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்தனர்.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாய்பாபா கோவில் துவங்கி, பெரிய விநாயகர் கோவில், எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு சிக்னல் வரை அரை கி.மீ. துாரம் சாலையை சீரமைத்து, தார் ரோடு போட்டனர். சாலை சீரமைப்பால், வாகன ஓட்டிகள் சிரமமின்றி தற்போது பயணிக்கின்றனர்.
