தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒளிராத தெரு விளக்கு... ஓயாத தண்ணீர் பிரச்னை!

ஒளிராத தெரு விளக்கு... ஓயாத தண்ணீர் பிரச்னை!

ஒளிராத தெரு விளக்கு... ஓயாத தண்ணீர் பிரச்னை!


ADDED : மார் 05, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே பாலத்தில், 10 தெருவிளக்கு எரிவதில்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினரும் கண்டுகொள்வதே இல்லை.

- ராஜேஷ், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)

திருப்பூர், ஓடக்காடு, இந்திரா நகரில், 15 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- சுப்பு, ஓடக்காடு. (படம் உண்டு)

திருப்பூர், பி.என்.,ரோடு, பாண்டியன் நகரில் இருந்து அண்ணா நகர் வரை தெருவிளக்குகள் எதுவும் எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- சவுடேஸ்வரன், பாண்டியன்நகர். (படம் உண்டு)

இப்படி செய்யலாமா...

ஊத்துக்குளி, கூனம்பட்டிபுதுார், புது காலனி பகுதியில் நாய்கள் விஷம் வைத்துக் கொள்ளப்படுகிறது. விலங்கினங்களை துன்புறுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சோழன், புதுகாலனி. (படம் உண்டு)

அவிநாசி - மங்கலம் பைபாஸ் பிரிவு அருகே பஸ் ஸ்டாப்பை ஒட்டி குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுகிறது. தொடர்ந்து புகை வெளியேறுவதால், அவ்வழியாக செல்வோர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.

- பொன்னுசாமி, மங்கலம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், கருமாரம்பாளையம், மூகாம்பிகை நகர் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வினியோகிக்கும் போதெல்லாம், அதிகளவில் தண்ணீர் வீணாகி, கால்வாயில் நிறைகிறது.

- சிந்து, மூகாம்பிகை நகர். (படம் உண்டு)

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன் பகுதியில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

- சுதர்சன், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு கலைக்கல்லுாரி சந்திப்பு முன், அடிக்கடி கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ஆறுபோல் வழிந்தோடுகிறது.

- ஸ்ரீதரன் சோனைராஜா, பல்லடம். (படம் உண்டு)

ஈக்கள் தொல்லை

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு பின் பகுதியில் இருந்து ரயிலில் வரும், மீன் பார்சல்களை நீண்ட நேரம் எடுத்து செல்வதில்லை. இதனால், அதில் ஈக்கள் மொய்த்து, துர்நாற்றம் வீசுகிறது.

- தேவசகாயம், பி..என்., ரோடு. (படம் உண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us