/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறக்காத நல வாழ்வு மையம் நோயாளிகளுக்கு சிரமம்
/
திறக்காத நல வாழ்வு மையம் நோயாளிகளுக்கு சிரமம்
ADDED : மே 18, 2025 11:11 PM

அனுப்பர்பாளையம், ; திருப்பூர் மாநகராட்சி, 30வது வார்டு, லட்சுமி நகரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி சார்பில், நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.
கட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நகர்ப்புற நல வாழ்வு மையம் காட்சிப்பொருளாக காட்சியளிக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது: மேட்டுப்பாளையம், ராம் நகர், ராமையா காலனி, லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.
இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்பகுதி பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால், தொலைவில் உள்ள அவிநாசி ரோடு, அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வைத்திருக்கும் பெண்கள் உள்ளிட்டோர் வெகு தொலைவு செல்லமுடியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.