ADDED : செப் 24, 2025 12:13 AM
மத்திய அரசின் ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் தான், தற்போது தலைப்பு செய்தியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஏதாவது ஒரு வகையில் அரசுக்கு வரி செலுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்கின்றனர், என்ற விழிப்புணர்வு இம்முறை சற்று அதிகமாகவே மேலோங்க துவங்கியிருக்கிறது.
எந்தெந்த பொருளுக்கு என்ன விலை, எவ்வளவு வரி என்பதை, மக்கள் அலசி ஆராய்ந்து பார்க்க துவங்கியிருக்கின்றனர். வரி சீர்த்திருத்தம் என்பது, வீட்டின் பொருளாதாரத்தின் மீதான பார்வையை விசாலமாக்கியிருக்கிறது என்பதே யதார்த்தம். தங்களது மாத பட்ஜெட் மற்றும் நுகர்வின் போது, இதுவரை தாங்கள் செலுத்திய வரி, தற்போது திருத்தியமைக்கப்பட்ட வரி, அதன் வாயிலாக கிடைத்த சேமிப்பு ஆகியவற்றை அறிந்துக் கொள்ளும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. 'அவ்வாறு சேமிக்கப்படும் தொகை, தங்கள் எதிர்காலத்துக்கான முதலீடாகவோ, சேமிப்பாகவே மாற்றிக் கொள்வதற்கான திட்டமிடலை வகுக்க வேண்டும்,' என்பதே பொருளாதார வல்லுனர்களின் அறிவுரை.