/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கட்டுபடியாகாத பால் விலை அதிகரித்த தீவன விலை'
/
'கட்டுபடியாகாத பால் விலை அதிகரித்த தீவன விலை'
ADDED : ஜன 12, 2025 11:49 PM
விவசாயிகள் கூறியதாவது: பால் உற்பத்தியாளர் பயன் பெற, கொள்முதல் விலை மூன்று ரூபாய் சில மாதங்களுக்கு முன் உயர்த்தப்பட்டது; இது போதாது. பசும்பால் விலை பொங்கலுக்கு பின் லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த வேண்டும். பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு, சோளம் விலைகள் உயர்ந்து விட்டது.
விவசாயம் செய்வதும், கால்நடை வளர்ப்பதும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அரிதாகி வருகிறுது. எனவே, பால் விலையை பத்து ரூபாய் உயர்த்தி, 40 ரூபாயாக்க வேண்டும். எருமை பால் விலை, 42 முதல் 45 ரூபாயாக உள்ளது; 54 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அரசின் உதவிகள் குறைகிறது. கலப்பு தீவனத்துக்கு ஏற்பாடு செய்தால் தான், பால் உற்பத்தி பெருகும்.
மாட்டுத்தீவன விலை நிலையில்லாமல் உள்ளது. நாளுக்குள் நாள் உயர்ந்து வருவதால், கால்நடை வளர்ப்போர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கடந்த ஆண்டுகளில், 180 முதல், 250 ரூபாய் வரை இருந்த 15 கிலோ வைக்கோல், தற்போது, கிலோ, 300 முதல், 350 ரூபாயாகியுள்ளது. வைக்கோல் விற்பனைக்கு கொண்டு வருவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. 50 கத்தை கொண்ட சோளத்தட்டு, 2,500 - 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டுபடியாகாத விலை என்பதால், மாற்று தீவன முறைகளை தேட வேண்டிள்ளது. இவ்வாறு, விவசாயிகள் கூறுகின்றனர்.