/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீராத குடிநீர் பிரச்னை: பி.டி.ஓ. ஆபீஸ் முற்றுகை
/
தீராத குடிநீர் பிரச்னை: பி.டி.ஓ. ஆபீஸ் முற்றுகை
ADDED : டிச 10, 2025 09:13 AM

பல்லடம்: கிருஷ்ணாபுரம் பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக, குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை என்று கூறி, பொதுமக்கள், பி.டி.ஓ., ஆபீசை நேற்று முற்றுகையிட்டனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'கிருஷ்ணாபுரம் கிராமத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில், நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் சப்ளை செய்யப்படுவதில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை' என்றனர்.
முன்னதாக, பி.டி.ஓ., பானுப்பிரியா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 'நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,' பி.டி.ஓ,, கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

