/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்க்கப்படாத குறைகளுக்கு முழுமையான தீர்வு வேண்டும்!
/
தீர்க்கப்படாத குறைகளுக்கு முழுமையான தீர்வு வேண்டும்!
தீர்க்கப்படாத குறைகளுக்கு முழுமையான தீர்வு வேண்டும்!
தீர்க்கப்படாத குறைகளுக்கு முழுமையான தீர்வு வேண்டும்!
ADDED : நவ 24, 2024 04:00 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காலாண்டு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாராஜன் தலைமையில் நடந்தது.
மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணையன் முன்னிலை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
'இதுபோன்ற குறைகேட்பு கூட்டங்களில், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை; அப்படியே தீர்வு கூறினாலும், அது பெரியளவில் பலன் தருவதாக இல்லை' என, நுகர்வோர் அமைப்பினர் சிலர் கூறினர்.
'நுகர்வோரின் குறைகளுக்கு, 30 நாட்களுக்குள் அதிகாரிகள் முழுமையாக தீர்வு காண வேண்டும்' என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், பங்கேற்ற திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் காதர்பாஷா, பொது செயலர் கிறிஸ்டோபர், அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசியதாவது:
நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில், பல நாட்களாக குப்பை தேங்கிக் கிடக்கிறது.
இதனால் எலிகளின் நடமாட்டம் அதிகரிக்கிறது; இது நோய் பரவவும் காரணமாகி விடுகிறது. அத்துடன், தெரு நாய்களும், குப்பையை கிளறி, உணவுக் கழிவுகளை உண்கின்றன. பயோ மைனிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் நகர பேருந்துகள், அடிக்கடி பழுதாகி நிற்கின்றன; பஸ்களின் பராமரிப்பும் மோசமாக உள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கின்றனர். இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

