sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்

/

தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்

தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்

தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்


ADDED : ஜூன் 13, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், பெருமாநல்லுார் ரோட்டில் கண்ணகி நகர், திருவள்ளுவர் நகர், ராஜாஜி நகர், காட்டன் மில் ரோடு, பாரதி நகர், ஸ்ரீநகர், தாயம்மாள் லே-அவுட், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஜே.பி., நகர், கஞ்சம்பாளையம், எம்.எஸ்., நகர், அம்பேத்கர்காலனி, வி.ஆர்., நகர், செல்வராஜ் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக, 17-வது வார்டு உள்ளது.

வீடுகளுக்குள் மழைநீர்


புவி அமைப்பில் திருப்பூர் - பெருமாநல்லுார் ரோடு, மேட்டுப்பாங்கானதாகவும், கண்ணகி நகர் துவங்கி, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம் வரை தாழ்வானதாகவும் உள்ளது. கன மழை பெய்தால், அம்பேத்கர் காலனி, கஞ்சம்பாளையம் பிரிவு சந்திப்பு, சின்ன பொம்மநாயக்கன் பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் சென்று விடும் நிலை உள்ளது.

கடந்த, 20 ஆண்டுகள் முன் நகராட்சியாக இருந்த போது கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் மட்டுமே இன்னமும் இருக்கிறது.

பாம்புகளின் புகலிடம்


நெசவாளர் காலனி பள்ளிக்கு பின்புறம் மாநகராட்சி நகர்நல மையம் செயல்படுகிறது. முன்புறம் முட்புதர் மண்டியுள்ளதால், நகர்நல மையம் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. இதனால், பாம்புகள் வளாகத்துக்குள் வந்து விடும் நிலை உள்ளது.

வாகனம் தடுமாற்றம்


வாகன போக்குவரத்து நிறைந்துள்ள காட்டன் மில் ரோடு, பனியன் சந்தையாக 'மினி காதர்பேட்டை'யாக செயல்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. வெள்ளை பெயின்ட், அடையாளம், அறிவிப்பு எதுவும் இல்லை. வேகத்தடை இருக்குமிடமே தெரியாமல், பலர் தடுமாறுகின்றனர். ஆங்காங்கே குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், மற்ற வார்டுகளை போல், இந்த வார்டிலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

வகுப்பறைகள் தேவை


வார்டில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் படிக்கும் பள்ளி யாக நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 37 ஆண்டு களாக செயல்படும் இப்பள்ளிக்கு கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

''வளாகத்துக்குள் அங்கன்வாடி, துவக்கப்பள்ளி செயல்படுவதால், கழிப்பிடத்தை விரிவுபடுத்தி, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டித்தர வேண்டும்'' என்று பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர். பள்ளி துவக்கம் மற்றும் நிறைவு பெறும் நேரத்தில் நெரிசல் அதிகமாகிறது.

மையத்தடுப்பு வைத்தும் வாகனங்கள் எண்ணிக்கை, வேகம் குறைந்தபாடில்லை. பி.என்., ரோட்டில் இருந்து, 50 மீ., தொலைவில் பள்ளி நுழைவு வாயில் உள்ளது. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என பெற்றோர் கூறுகின்றனர். வார்டில் உள்ள மற்றொரு பள்ளி, கஞ்சம்பாளையம் துவக்கப்பள்ளி. இப்பள்ளி சுற்றுச்சுவர் ஒட்டி பெரிய ஆலமரம் வளர்ந்துள்ளதால், சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு கூடுதல் வகுப்பறை கட்டும் பணி ஒருபுறம் நடக்கிறது.

'தொட்டி' அரசியல்


அம்பேத்கர் நகர் விரிவு பகுதியில் உப்புத் தண்ணீர் வழங்க போர்வெல் போட்டு, தண்ணீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அரசியல் 'தலையீடு' காரணமாக தொட்டி கட்டாமல், அவற்றுக்கு நடப்பட்ட துாண்கள் மட்டும் காட்சி பொருளாக உள்ளது.

இதற்குமா தாமதம்?


பாரதி நகரில் இருந்து பி.என்., ரோடு வடக்கு உழவர் சந்தை, ஸ்ரீ நகர் சந்திப்புக்கு செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயில் அதிகளவில் தேங்கியிருந்த மண்ணை அள்ளி ரோட்டில் கொட்டி ஒரு மாதமாகிறது. அந்த மண்ணில் செடிகள் முளைத்து விட்டன. இன்னமும் அள்ளி செல்லவில்லை.

சாலை உயரட்டும்


ராஜாஜி நகர் நான்காவது வீதியில் சிமென்ட் சாலை சேதமாகி இரண்டு மாதத்துக்கும் மேலாகி விட்டது. இருமுறை வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து நடந்த போதும், இன்னமும் சரிசெய்யவில்லை. கண்ணகி நகர் - பி.என்., ரோடு சந்திப்பு சாலை உயரமாக உள்ளது.

கண்ணகி நகரில் இருந்துபி.என்., ரோடு வந்தடையும் வாகனங்கள் தாழ்வான சாலை என்பதால், வேகமாக வருகிறது. மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்கள் மீது மோதும் சூழல் உருவாகிறது. வேகத்தடை அமைப்பதுடன், சாலையையும் உயர்த்த வேண்டும்.

கால்வாய் உயரட்டும்


ஜே.பி., நகரில் இருந்து - கஞ்சம்பாளையம் பிரிவு வரை விரிவான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. மழைநீர் வடிகால் உயரம் குறைவாக இருப்பதால், சிறிய அளவில் மழை பெய்தாலும், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது.

அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது; கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. கால்வாய் உயரத்தை விட குடியிருப்புகள் தாழ்வாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் மழைநீர் வீடுகளுக்கு வரும் நிலை உள்ளது. இப்பகுதியில் உயரமான சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும்.

பல்வேறு பிரச்னைகள் நீடித்தாலும், அவற்றுக்குத் தீர்வு கிட்டா ததால், இந்த வார்டு மக்கள் குமுறலுடன் உள்ளனர்.

விபத்து அபாயம்

புதிய பஸ் ஸ்டாண்ட், கொங்கு மெயின் ரோட்டை இணைக்கும் பிரதான சாலையாக கண்ணகி நகர் - எம்.எஸ்., நகர் சந்திப்பு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் இருபுறமும், 50க்கும் மேற்பட்ட தெருவோர கடைகள் உள்ளன. வளைவில் வாகனங்கள் வேகமாக திரும்புவதால், விபத்து அபாயம் அதிகமாக உள்ளது.

எம்.எஸ்., நகர் சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றி, சாலையை அகலப்படுத்தி, உயர்கோபுர மின்விளக்கை சுற்றி, ரவுண்டானா அமைத்தால், வாகனங்களின் வேகம் குறையும்.

கண்ணகி நகர், காட்டன் மில் ரோடு, கஞ்சம்பாளையம், ஜே.பி., நகர் உள்ளிட்ட பகுதியில் பனியன் நிறுவனங்கள் பல செயல்படுகிறது. குடியிருப்புகளில் இருந்து அவ்வப்போது குப்பைகள் பெற்றாலும், நிறுவனங்களில் இருந்து பனியன் கழிவுகள், குப்பைகள் நிறைகிறது. ஓரிரு நாட்கள் குப்பை எடுக்காமல் தேங்கினால், அவற்றை நாய்கள் ரோட்டுக்கு இழுத்து வந்து விடுகின்றன. வார்டின் பத்துக்கும் மேற்பட்ட வீதியில் குப்பை தொட்டி நிறைந்தும், குப்பை தொட்டிக்கு அருகில் குப்பை சிதறி, வியாபித்து இருப்பதையும் காண முடிகிறது.

தண்ணீர் வினியோகம் பாரபட்சம்

மழைநீர் தேங்கும் பிரச்னையை தீர்க்க அம்பேத்கர் காலனியில், தரைப்பாலங்களை உயர்த்திக் கட்டியுள்ளோம். 60க்கும் அதிகமான குடியிருப்பு பகுதிகள் உள்ளதால், உப்புத் தண்ணீர் டேங்க் பணி துவங்க தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. 2006க்கு பின், ராஜாஜி நகரில் ரோடு போடவில்லை. கஞ்சம்பாளையத்தில் கழிவுநீர் வெளியேற்ற 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லை. தற்காலிகமாக தான் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சின்ன பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கால்வாயை உயர்த்திக் கட்ட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பாப்பாத்தாள் கோவில், தாயம்மாள் லே- அவுட் பகுதியில், 20 ஆண்டுகளாக கால்வாய் இல்லை. இரண்டு ஆண்டுகளாக கடிதம் கொடுத்தும் நிதி ஒதுக்கவில்லை. வார்டின் தலையாய பிரச்னையாக குடிநீர் வினியோகம் உள்ளது. தலைகாட்டினால், தண்ணீர் பிரச்னையைத்தான் மக்கள் சொல்கிறார்கள். தண்ணீர் வினியோகிப்பதில் வார்டுக்கு வார்டு பாரபட்சம் காட்டுகின்றனர். 'சொல்லும் போதெல்லாம் சரி பார்க்கிறோம்' என மேயர் மற்றும் அதிகாரிகள் பதில் சொல்கின்றனர். ஆனால், செய்வதில்லை. குப்பையை எடுத்துச் சென்றாலும், மீண்டும் சேர்ந்து விடுகிறது. மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஆராய வேண்டும்.

- செழியன் (த.மா.கா.,), 17வது வார்டு கவுன்சிலர்.






      Dinamalar
      Follow us