/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பற்ற கழிப்பிடம்; நகராட்சியில் மக்கள் மனு
/
பாதுகாப்பற்ற கழிப்பிடம்; நகராட்சியில் மக்கள் மனு
ADDED : மே 17, 2025 01:13 AM

அவிநாசி : அவிநாசி முத்து செட்டிபாளையம், சிவசண்முகம் வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நேற்று மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
முத்துச்செட்டிபாளையம் பகுதியில் ஒரு பொதுக்கழிப்பிடம் மட்டும் செயல்பாட்டில் உள்ளதால், அதிக நேரம் காலை கடனை கழிக்க கழிப்பிடம் முன்பு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
கழிப்பிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. கதவுகள் இல்லாததால் பாதுகாப்பற்ற முறையில் உபயோகிக்கும் நிலை ஏற்படுகிறது.
சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. சுற்றிலும் புதர்களாக உள்ளதால் விஷ பாம்புகள் உள்ளிட்ட பூச்சிகள் அதிக அளவில் சுற்றி வருகிறது. இதனால், பெண்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
பார்க் வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் பூட்டி வைத்துள்ளனர். கழிப்பிடத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.
பல ஆண்டுகள் முன்பு எம்.எல்.ஏ., தனபால் அடிக்கல் நாட்டிய சமுதாய நலக்கூடக் கட்டடம் பணிகளை துவங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் இல்லாததால் சுகாதார ஆய் வாளர் கருப்பசாமியிடம் பொதுமக்கள் மனுவை கொடுத்தனர்.