ADDED : ஆக 25, 2025 12:35 AM

அனுப்பர்பாளையம்;
திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், தெருமுனை பிரசார கூட்டம் அனுப்பர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நடந்தது.
பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோகநாதன், தலைமை வகித்தார். எம்.எல்.ஏ விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பேசியதாவது: திருப்பூரின் குப்பை பிரச்னையை தீர்க்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தோம். மூன்று அல்லது நான்கு நாட்களில் அள்ளுவதாக கூறினர்; இன்று வரை தீர்வு இல்லை.
இந்த ஆட்சி தமிழகத்துக்கு தேவையா என்பதை திருப்பூர் மக்கள் சிந்திக்க வேண்டும். குப்பையை ஏன் எடுக்கவில்லை என கம்யூனிஸ்ட், காங்கிரசார் கேட்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் தி.மு.க.,வின் தோழமை கட்சிகள்.
அடுத்த மாதம் 10 மற்றும் 12ம் தேதி கட்சியின் பொது செயலாளர் பழனிசாமி திருப்பூர் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.