பயன்பாட்டுக்கு வராத கட்டடம் மா.கம்யூ. கடும் கண்டனம்
பயன்பாட்டுக்கு வராத கட்டடம் மா.கம்யூ. கடும் கண்டனம்
ADDED : செப் 08, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
பல்லடம், செப். 9–-
பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மா.கம்யூ., கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.
கிளைச் செயலாளர் தினகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமசிவம், பிரவீன் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைசாமி, முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிக்கு உட்பட்ட மகாவிஷ்ணு நகர் பகுதியில், 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை பயன்பாடாடுக்கு கொண்டுவர வேண்டும் என, கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. கிளை நிர்வாகி முருகேஷ் நன்றி கூறினார்.
