ADDED : ஜூன் 25, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, மங்கலம் ரோட்டில் ஒரு வீட்டின் முன்பு, நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகை கம்பத்தில் பொருத்தாமல் தரையில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது.
பல்லடம் வழியாக வரும் வாகனங்கள் சேலம், புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், கோவை ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கான துாரம்; பாதை அமைப்பையும் குறிப்பிட்டுள்ள இந்த பலகை தரையில் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளால் சரிவர கவனிக்க முடிவதில்லை. வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி பலகையை உரிய இடத்தில் பொருத்த வேண்டும்.