ADDED : மார் 08, 2024 01:37 AM

'நிறைய பேரு, வண்டிய வித்துடுன்னு சொன்னாங்க. வண்டியை விக்க மனசு வராம, நானே ஓட்டத் துவங்கிட்டேன்'' என புளகாங்கிதப்படுகிறார், திருப்பூரில் சரக்கு ஆட்டோ ஓட்டி வரும் மல்லிகா.
''உடுமலைதாங்க என் சொந்த ஊரு. என் பிள்ளைங்க படிப்புக்காக திருப்பூர் வந்தோம். நான் தையல் வேலை தான் செய்துட்டு இருந்தேன்; அப்புறம் வெங்காய கடை வைச்சேன். பேங்கில கடன் வாங்கி, புது மாடல் சரக்கு ஆட்டோ வாங்கினோம். டிரைவர் வைச்சு ஓட்டிப் பார்த்தோம்; 10 டிரைவரு மாத்தியாச்சு.
யாரும் சரிபட்டு வரல. வண்டியை சும்மா நிறுத்தி வைச்சிருந்தோம். நிறைய பேரு, வண்டியை வித்துடுங்கன்னு கூட சொல்றாங்க. கடைசியா, நானே வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன். நம்ம மாநிலம் மட்டுமில்லாம, கர்நாடகா, கேரளாவுக்கு கூட லோடு ஏத்திட்டு போய்ட்டு வந்திருக்கேன். போலீஸ்காரங்க ரொம்ப பாதுகாப்பா இருக்காங்க; அதனால், நைட் நேரத்துல கூட தைரியமா வண்டியை ஓட்டிட்டு போய்ட்டு வர முடியுது. இதுக்கெல்லாம் தன்னம்பிக்கை தான் காரணம்,'' என்றார் கண்களில் நம்பிக்கை மிளிர.
