ADDED : ஜன 03, 2026 07:45 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள உப்பாறு அணை சார்ந்து, 6,100 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வலது மற்றும் இடத கால்வாய்
வாயிலாக பாசனம் பெறும் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்-டுள்ள பயிர்களுக்காக, இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட உள்-ளது.
பயிர்களுக்காகவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், இன்று (3ம் தேதி) முதல் வரும் 23 ம் தேதி வரை, தகுந்த இடைவெளி விட்டு, தண்ணீர் திறக்க
அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது; 11 நாட்களுக்கு, மொத்தம் 173 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால், தாராபுரம் தாலுகாவிலுள்ள, வேலாயுதம்பாளையம், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், கெத்தல்ரேவ், சூரிய நல்லுார், கண்ணன் கோவில், வரப்பாளையம்,
மடத்துக்குளம், வடுகபாளையம், சின்னப்புத்துார் கிராமங்களில், 6,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

