/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு :கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வலியுறுத்தல்
/
முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு :கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வலியுறுத்தல்
முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு :கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வலியுறுத்தல்
முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு :கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2024 11:08 PM
உடுமலை:முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க, அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, உடுமலை ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உடுமலை ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். பி.டி.ஓ., க்கள் சுப்ரமணியம், ப்யூலா முன்னிலை வகித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்றியக்குழு கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால், மீண்டும் நேற்று நடந்தது. இக்கூட்டத்திலும், பெரும்பான்மையான அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில், குறிஞ்சேரி ஊராட்சியில், முறைகேடாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு நடத்த, வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து குடிநீர் இணைப்புகள் பழுதடையும் நேரங்களில், சரிபார்க்கும் பணிகளை குடிநீர் வடிகால் வாரியத்தினர் அலட்சியப்படுத்தி, தாமதமாக மேற்கொள்வதாகவும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
பி.டி.ஓ., சுப்ரமணியம் கூறியதாவது: முறைகேடான குடிநீர் இணைப்புகளை அப்புறப்படுத்தவும், முறைப்படுத்தவும் கவுன்சிலர்களின் ஒத்துழைப்பும் அவசியம். அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொள்ளலாம்.
கவுன்சிலர்கள் இதுகுறித்து, வெளிப்படையான புகார் அளிக்க வேண்டும். தற்போது குடிநீர் வடிகால் வாரியத்தில், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் அதிகம் இருக்கின்றனர்.
இதனால் பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படலாம். உட னடியாக பழுதுகளை சரிபார்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.

