/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய மின் மோட்டார்களை பகலில் இயக்க வலியுறுத்தல்
/
விவசாய மின் மோட்டார்களை பகலில் இயக்க வலியுறுத்தல்
ADDED : டிச 13, 2024 08:24 PM
உடுமலை; சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில், விவசாய மின் மோட்டார்களை பகலில் இயக்குமாறு, மின் வாரியம் அறிவித்துள்ளது.
உடுமலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் கீதா கூறியிருப்பதாவது:
பகலில் கிடைக்கும், புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை, அதிகமாக பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க முடியும்.
மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது, மாசு ஏற்படுவதன் அளவை குறைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
எனவே, பகலில் அதிகளவு தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில், அனைத்து விவசாயிகளும் இயன்ற அளவு, தங்களது விவசாய மின் மோட்டார்களை, பகல் நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டும், என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்தினரின் அறிவுறுத்தல்களை விவசாயிகள் பின்பற்றி சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தலாம்.