/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வலியுறுத்தல்
/
அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 15, 2025 11:41 PM
உடுமலை; உடுமலை வட்டார அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை வட்டாரத்தில், 138 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் மையங்களில் பராமரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மையத்திலும் ஒரு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கன்வாடி மையங்களில் அடிப்படையான கட்டமைப்பு, சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கட்டாய தேவையாக உள்ளது. ஆனால், உடுமலை வட்டாரத்திலுள்ள மையங்களில் கட்டமைப்பு மற்றும் கழிப்பறை வசதிகள் பராமரிக்கப்படுவதில்லை.
கட்டமைப்புகள், மேற்கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் விரிசல் விட்டும், பாதுகாப்பில்லாத நிலையில்தான் உள்ளது. மேலும், கழிப்பறைகள் பலவும் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் இறங்காமல் அசுத்தமாக இருக்கின்றன.
பெற்றோர் குழந்தைகளை தனியாக விடுவதற்கு அச்சப்பட்டு, அவர்களும் மையங்களில் காத்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த சமூக நலத்துறையினர் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து சீரமைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.